இறக்கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை? படு வைரலாகும் வீடியோ!
இறக்கைகளுடன் பிறந்ததாக ஆண் குழந்தையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பறக்கும் குழந்தை
ஒரு ஜோடி இறக்கைகளுடன் ஒரு குழந்தை பறப்பதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. வீடியோவில், குழந்தைக்கு இறக்கைகள் முளைத்திருப்பதை பார்த்து வியப்படைந்த தாயார், குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்கிறார்.
அப்போது, குழந்தை ரிக்கியின் எலும்புடன் இறக்கைகள் இணைந்திருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர் கூறுகிறார்.
Fact Check
பின்னர் அந்த குழந்தையின் வளர்ச்சி, பொது இடத்தில் பறந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது, குழந்தையின் அசாத்திய திறனை செய்தியாளர்களுக்கு காட்டும்போது, பறந்துகொண்டிருந்த குழந்தை வானத்தில் பறந்து காணாமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள் இது இயற்கையின் அதிசயம், கடவுளின் செயல் என்று கருத்துகள் பதிவிட்டனர். இதற்கு பலர் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்த வீடியோ குறித்த தகவல்களை இணையத்தில் தேடியதில், 2009-ம் ஆண்டு வெளியான 'ரிக்கி' என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் என்பது தெரியவந்தது.