திக்...திக்... வீடியோ - சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ பதைபதைக்கவைத்துள்ளது.
தவறி விழுந்த குழந்தை
சென்னையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருமுல்லைவாயலில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் தவறி விழுந்துள்ளது கைக்குழந்தை.
இதனை கண்ட அக்குடியிருப்பு வாசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அக்குடியிருப்பு வாசிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீட்கும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில், பால்கனியில் தவறி விழுந்த குழந்தை கீழே விழும் நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தவறி விழும் பட்சத்தில் குழந்தையை பிடிக்க பலரும் போர்வையை விரித்து நின்றனர்.
போராடி
கீழ் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக சிலர் தவறி விழ இருந்த குழந்தையை போராடி, சிறிது நேரம் கழித்து மீட்டனர். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
Today morning in my cousins apartment in Chennai ? pic.twitter.com/VAqwd0bm4d
— ?RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) (@RengarajMr) April 28, 2024
குழந்தை எவ்வாறு அந்த இடத்தில் இப்படி வந்தது, குழந்தையும் பெற்றோர்கள் எங்கே என்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. குழந்தை வளர்ப்பில் இவ்வளவு அஜாக்கிரதை தேவையா..? என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.