குழந்தையின் அழுகையை நிறுத்திய ‘அரபிக் குத்து’ பாட்டு - இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்துள்ளது. யூட்யூப்பில் இதுவரை 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் பெற்றுள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்று பயங்கரமாக அழுதுக்கொண்டிருக்கிறது. உடனே, டிவியில் "ஹலமித்தி ஹபிபோ" பாடல் போட்டவுடன் அழுத குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. கொஞ்சம் நேரம் கழித்து பாட்டு மறுபடியும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் அக்குழந்தை பயங்கரமாக அழ ஆரம்பிக்கிறது.
அந்த அளவிற்கு இப்பாடல் பிஞ்சு குழந்தைகளின் இதயத்தில் கூட இடம்பிடித்துவிட்டது.
இதோ அந்த வீடியோ -