இனி ஏடிஎம் மையத்தில் பி.எப். பணம் எடுக்கலாம் - எப்போது இருந்து தெரியுமா?
ஏடிஎம் மையத்தில் பி.எப். பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைப்பு நிதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 7.37 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், பிஎப் பணத்தை எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய அப்டேட்
இதை எளிமைப்படுத்த வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இபிஎப்ஓ உறுப்பினர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படும். சந்தாதாரர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பிறகு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து கொள்ளலாம். எவ்வளவு எடுக்கலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படும். தற்போது தொழிலாளர் பங்களிப்பு 12% ஆக உள்ளது. இந்த வரம்பு நீக்கப்பட உள்ளது. சிலர் 10% தொகையை செலுத்த விரும்பலாம்.
வேறு சிலர் 15% தொகையை செலுத்த விரும்பலாம். புதிய கொள்கையின்படி தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சதவீதத்தை நிர்ணயித்து கொள்ளலாம். எனினும் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில் மாற்றம் செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.