பைக்கில் வந்த இளம்பெண்; திடீரென பொது இடத்தில் இளைஞர் செய்த காரியம் - கொடூரம்!
பொது இடத்தில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் மீது தாக்குதல்
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பைக்கை நிறுத்தி அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தனது ஹெல்மெட்டாலும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
வழக்கறிஞர் புகார்
இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட இளைஞர், பைக்கில் அமரவைத்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். பொது இடத்தில் இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.