தம்பியை திருமணம் செய்த மனைவி; கைக்குழந்தைக்கு நேர்ந்த சோகம் - கணவன் வெறிச்செயல்!
7 மாத குழந்தையை தரையில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜய் சஹானி (30) என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரது மனைவி விஜய் சஹானியின் தம்பியை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி விஜய் சஹானி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரது மனைவியும் சகோதரரும் திருமணம் செய்து கொண்டது குறித்து தெரியவந்துள்ளது.
குழந்தை கொலை
இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர்களது 7 மாத பெண் குழந்தையை தூக்கி சென்று தரையில் வீசி கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி விஜய் சஹானியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.