திகார் சிறையில் டெல்லி முதல்வர் - ஜெயிலில் சிறப்பு சலுகைகள் என்னென்ன?

Delhi India Arvind Kejriwal Enforcement Directorate
By Jiyath Apr 02, 2024 03:29 AM GMT
Report

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அறை எண் 2-ல் அடைக்கப்பட்டுள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - ஜெயிலில் சிறப்பு சலுகைகள் என்னென்ன? | What All Court Allowed Arvind Kejriwal In Tihar

அப்போது மேற்கொண்டு அவரை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரவில்லை. இதனால் வரும் 14 -ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள திகார் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார்.

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு!

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு!

சிறப்பு சலுகைகள் 

கெஜ்ரிவால் முதலமைச்சராக இருப்பதால் விதிகளின் படி சிறையில் அவருக்கு சில சலுகைகள் கிடைக்கும். மேலும், நீதிமன்றமும் சில சலுகைகளை அவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர், தலையணை, சாக்லேட் மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - ஜெயிலில் சிறப்பு சலுகைகள் என்னென்ன? | What All Court Allowed Arvind Kejriwal In Tihar

அதேபோல், தனது மனைவியை தினமும் சந்திக்கவும் கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர் நீரிழிவு நோயாளி என்பதால், உடல் நிலையைக் கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் கெஜ்ரிவால் தன்னுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.