தீவிரமடைந்த வாக்குவாதம்; போலீஸ் தாக்கியதால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு - ஷாக் சம்பவம்!
காவலர் தாக்கியதில் கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதம்
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார். இவர் முன்தினம் இரவு சாலையில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த ரிஸ்வான் எனும் போலீசார் கார் ஓட்டுநர் அருகே சென்று விசாரித்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் அந்த காவலர், டிரைவர் ராஜ்குமாரின் நெஞ்சில் ஓங்கி மிதித்துள்ளார்.
இதனால், நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்து பதறிய அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கு தாவல் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உயிரிழப்பு
இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அங்கு மயங்கிய நிலையில் இருந்த கார் ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஓட்டுநர் ராஜ்குமார், மாரடைப்பால் பலி என்னக்கூறி வழக்குப் ஏதும் பதியாமல் இருந்துள்ளனர். முன்னதாக புகார் அளித்த பெண்ணையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் தெரிவந்தது.
இது குறித்து போலீசார் யர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவலர் ரிஸ்வானையும் சேர்த்து மூன்று பேரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.