முகம் இப்படி இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்; 'lucky face' பெண்களை தேடும் ஆண்கள்! என்ன காரணம்?
பெண்ணிற்கு வட்ட முகம் இருந்தால் அவரது எதிர்கால கணவருக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடும் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்ட முகம்
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் இணையத்தில், தனது எதிர்கால கணவர் செல்வந்தராகவும் வெற்றிகரமானவராகவும் மாற்ற கூடியது என்று கூறி அவரது முகத்தை கடந்த மாதம் ஒரு வீடியோவாக பகிர்ந்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சுமார் 8,00,000 பார்வைகளை ஈர்த்துள்ளது. சீனாவின் பாரம்பரியம் படி, சில பெண்களின் முக அம்சங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று காலகாலமாக நம்பப்படுகிறது. ‘அதிர்ஷ்ட முகம்’ என்ற கருத்து நவீன காலத்தில் வெறும் மூடநம்பிக்கையாகக் கருதப்பட்டாலும், அங்கு அது இன்னும் நடைமுறையில் தான் உள்ளது.
ஒரு பெண்ணிற்கு வட்டமான முகம், பரந்த நெற்றி, வட்ட கன்னங்கள் இருந்தால் அவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும், தனது துணைக்கு நட்பையும் அதிர்ஷ்டத்தையும் தருபவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.
என்ன காரணம்?
சீன முக வாசிப்பு ஆதரவாளர்கலின் கூற்றுப்படி, அதிர்ஷ்டத்தை தக்கவைக்கும் முகத்திற்கு மூக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், கீழ் உதடு மேல் உதடுகளை விட சற்று நிரம்பியதாகவும், மென்மையான முடி மற்றும் பிரகாசமான கண்கள் போன்ற அம்சங்கள் இருப்பது அதிர்ஷ்டமான முகத்திற்கு இன்றியமையாதது என்று கருதுகின்றனர்.
கடந்த 2012-ல் ஹாங்காங் வணிக அதிபரின் பேரனான கென்னத் ஃபோக்கை மணந்த புகழ்பெற்ற சீன ஸ்பிரிங்போர்டு டைவர் குவோ ஜிங்ஜிங் என்ற பெண் இதற்கு உதாரணமாக திகழ்கிறார்.
அதே போல அந்த வீடியோவில் உள்ள பெண்ணின் முகமும் தற்போது இணையம் முழுவதுமாகப் போற்றப்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு பொதுவான அதிர்ஷ்ட முகத்தை தாங்கள் பார்த்ததில்லை என்று மக்கள் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் ஆன்லைன் டேட்டிங் சீனாவின் இளைஞர்களிடையே துணையை கண்டுபிடிப்பதற்கு அதிர்ஷ்ட முகத்தை உதாரணமாக வைத்து தேடுவதாக தெரியவந்துள்ளது.