Thursday, Jul 17, 2025

மனைவி ஹிஜாப் அணியவில்லை.. விவாகரத்து கேட்ட கணவர் -நீதிபதி கொடுத்த Highlight தீர்ப்பு!

Uttar Pradesh India Law and Order
By Vidhya Senthil 7 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

மனைவி ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஹிஜாப்

இந்தியாவில் சமீபகாலமாக விவாகரத்து வழக்குகள் கவனம் பெற்று வருகிறது. பொதுவாக மன உளைச்சல், சண்டை, உடல் ரீதியான கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தான் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்.

ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து

ஆனால் இங்கு மனைவி ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து கேட்டுள்ளார்.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் ஹிஜாப் அணியக் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.

குழந்தைக்கு யார் பெயர் வைப்பது? குடும்பத்தில் வெடித்த சண்டை -கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

குழந்தைக்கு யார் பெயர் வைப்பது? குடும்பத்தில் வெடித்த சண்டை -கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங் மற்றும் டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிஜாப் அணியவில்லை என்பது மன ரீதியான கொடுமையாகாதது.

 விவாகரத்து?

மனைவியைப் பொருள் போலப் பார்க்கிறீர்கள் என்று கூறிய நீதிபதி ஹிஜாப் அணியச் சொல்லிவிட்டு.. சுதந்திரம் என்று கூறுகின்றனர்.இதை ஏற்க முடியாது என்று ஆவேசமாகக் கூறினார். தொடர்ந்து பேசியவர்,’’மனைவியின் சுதந்திரம் என்பது அவரின் தனி நபர் விஷயம். ஹிஜாப் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதே தவறு.

ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து

ஒரு உரிமையியல் சமூகத்தில் அரசு கொடுத்திருக்கும் சுதந்திரம் எல்லாம் எல்லோருக்கும் உள்ளது. அது பெண்களுக்கும் உள்ளது .மேலும் இந்த மனுவை ஏற்றுகொள்ள முடியாது. இதன் காரணமாக உங்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது எனக் கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.