ஆசைக்கு இணங்க மறுத்த பெண் சித்தாள் - அடித்தே கொன்று மேஸ்திரி வெறிச்செயல்!
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண் தொழிலாளி கொலை
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனது வீட்டை புதுப்பிக்க எண்ணி கட்டிட மேஸ்திரி சந்துரு என்பவரை அணுகியுள்ளார். பின் அவரும் கௌசல்யா வீட்டிற்குச் சென்று பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இரவு பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக சந்துரு சென்றுள்ளார். அப்போது, அங்கு சித்தாள் வேலை பார்த்து வந்த சூலைப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சரண்யா(30) என்ற பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
அதிர்ச்சி பின்னணி
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து சந்துரு காவல்நிலையத்திலும் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சரண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், சரண்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. திருவெற்றியூரைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) என்பவர் சரண்யாவை சுத்தியலால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அதன்பின் அவரைப் பிடித்து விசாரித்ததில், கொத்தனார் வேல்முருகன் சித்தாள் வேலை பார்த்து வந்த சரண்யாவை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கொலை செய்துள்ளார். தற்போது, வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.