ஆசைக்கு இணங்க மறுப்பு : கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றி கணவன் செய்த கொடூர செயல்
ஆசைக்கு இணங்க மறுத்து கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றி கொலை செய்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுத்த மனைவி
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி ஆஷாவுடன் சேர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய சங்கர் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் அப்போது ஆஷா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது, ஆனால் சங்கர் அவரை விடாமல் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா ஓடிச்சென்று கிணற்றில் குதித்து உள்ளார்.
கொலை செய்த கணவன்
மனைவியைக் காப்பாற்ற சங்கரும் உடனடியாக கிணற்றில் குதித்துள்ளார். ஒருவழியாக அவரைக் காப்பாற்றியிருக்கிறார். இருப்பினும் மீண்டும் மற்றொரு சண்டை வந்துள்ளது. இந்தமுறை ஆத்திரமடைந்த சங்கர், ஆஷாவின் மர்ம உறுப்பு பகுதியை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ஏப்ரல் 18ஆம் தேதி சங்கரைக் கைது செய்தனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை காப்பாற்றி கொலை செய்த கணவனின் கொடூரச்செயல் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.