ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி.. - தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் ஆசிரியர் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில்மிஷம் செய்த ஆசிரியர்
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தயானதிட்சனா என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். டியூஷன் படிக்க வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் அந்த டியூஷன் ஆசிரியர் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரின் தொல்லையால் அந்த மாணவி மிகுந்து பயந்திருக்கிறாள். இதனால், டியூஷனுக்கு போவதை அந்த மாணவி நிறுத்தியிருக்கிறார். இந்நிலையில் வீட்டு பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று அந்த மாணவி பென்சில் வாங்க சென்றுள்ளார்.
அங்கு வந்த ஆசிரியர் தயான திட்சினா அந்த மாணவியை வழி மறித்துள்ளார். அவரைப் பார்த்த அந்த மாணவி மிகுந்து பயந்துள்ளாள். அப்போது, அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் ஊற்றி கொலை
கோபமடைந்த தயான திட்சினா மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மாணவியின் தலையில் ஊற்றியுள்ளார். இதில் அந்த மாணவி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது. இதனால், அதிர்ச்சியில் அந்த மாணவி உறைந்துள்ளாள்.
மாணவி எதிர்பாராத வகையில், திடீரென தயான திட்சினா தீ வைத்துள்ளார். தீ அம்மாணியின் உடல் முழுவதும் பரவியது. எரிப்பின் அனல் தாங்க முடியாமல் அம்மாணவி அலறி துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர்.
இதன் பின் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தயான திட்சனாவை கைது செய்தனர்.
தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுப்பு தெரிவித்த மாணவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.