மகனுக்கு திருமணம் ஆகல.. ஆட்டயப்போட்டு மருமகளுக்கு ஆப்பு வைத்த மாமனார்!

Chennai Crime
By Vinothini Oct 19, 2023 10:11 AM GMT
Report

மாமனார் ஒருவர் மருமகளை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றிய மாமனார்

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண் பாரதி (45). இவரது கணவர் விஜயகுமார், இவர் 2007-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். விஜயகுமார் பெயரில் பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருந்தது.

செங்கோடன்

இவரது மனைவி பாரதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், விஜயகுமாரின் தந்தையும், எனது மாமனாருமான மாதவரத்தில் வசிக்கும் செங்கோடன் (71), மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை என கூறி போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்ததாக கூறியுள்ளார்.

கேள்வி கேட்டது ஒரு குத்தமா? ஆத்திரத்தில் 8 வயது சிறுவனை அடித்து உதைத்த நபர் - வெறிச்செயல்!

கேள்வி கேட்டது ஒரு குத்தமா? ஆத்திரத்தில் 8 வயது சிறுவனை அடித்து உதைத்த நபர் - வெறிச்செயல்!

போலீஸ் விசாரணை

இதனை தொடர்ந்து, அவர் அந்த மனுவில், "போலியான ஆவணங்கள் பதிவு செய்து அவர் பெயரில் இருந்த நிலத்தை மோசடி செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

செங்கோடன், லோகநாதன்

இதில், பாரதி தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது. இதில் செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.