கேள்வி கேட்டது ஒரு குத்தமா? ஆத்திரத்தில் 8 வயது சிறுவனை அடித்து உதைத்த நபர் - வெறிச்செயல்!
நபர் ஒருவர் 8 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் கேள்வி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த உள்ள கூடத்துப்பட்டியில் வசித்து வருபவர் அருளப்பன். இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார், அவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்ததும், இல்லம் தேடிக் கல்வி வகுப்பிற்காகச் சென்ற சிறுவன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே வகுப்பில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது தந்தை வீட்டிற்க்கு அழைத்து செல்ல வந்தார். அவரிடம் இந்த சிறுவன் நீங்கள்தான் அந்த சிறுமியின் தந்தையா? என்று கேட்டுள்ளார்.
இணையத்தில் வைரல்
இந்நிலையில், போதையில் இருந்த அந்த மாணவியின் தந்தை, என்னை தெரியாமல் இந்த ஊரில் இருக்கியா? என சிறுவனை சரமாரியாக கன்னத்தில் அறைந்தும், நெஞ்சில் எட்டி உதைத்தும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதில் மாணவன் நெஞ்சு பகுதியில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுவனை அந்த நபர் அடித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சிறுவனின் தந்தை அருளப்பன் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை வின்சென்ட்ராஜை வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.