வீடு தேடுபவர்கள் தான் டார்கெட்.. லீசுக்கு விடுவதாக கூறி ரூ.2 கோடி ஆட்டயப்போட்ட நபர்!

Chennai Crime Prison
By Vinothini Oct 16, 2023 11:32 AM GMT
Report

லீசுக்கு வீடு தருவதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்தகைக்கு வீடு

சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் பாபு, இவர் அக்கா தங்கை என இருவரை மணந்து ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கிழக்கு தாம்பரத்தில் வேளச்சேரி ரோட்டில் சென்னை ஹோப்ஸ் மேனேஜ்மெண்ட், ஈவண்ட் மேனெஜ்மெண்ட் கம்பெனி என்ற பெயரில் வாடகை, மற்றும் குத்தகைக்கு வீடு கிடைக்கும் என்ற அறிவிப்புகளுடன், அலுவலகம் நடத்தி வந்தவர்.

scam-on-targeting-house-seekers-in-chennai

இவர்கள் கடந்த 2 வருடங்களாக அந்த சுயிற்றுவட்டார பகுதிகளில் டூ லெட் போர்டு வைத்த வீடுகள் மற்றும் குறிப்பாக வெளிநாட்டு சென்ற வீட்டின் உரிமையாளர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளனர்.

என்னுடன் பாலியல் உறவு வைத்தால் பேய் போய்விடும்.. பாதிரியாரை நம்பி மொத்தமாக இழந்த ஆசிரியர்!

என்னுடன் பாலியல் உறவு வைத்தால் பேய் போய்விடும்.. பாதிரியாரை நம்பி மொத்தமாக இழந்த ஆசிரியர்!

மோசடி

இந்நிலையில், தாம்பரம் பகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவர் ஆன்லைன் மூலமாக குத்தகைக்கு வீடு தேடியிருக்கிறார். அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பிரேம் பாபுவிடம் பேசியிருக்கிறார். பின்னர், வீட்டை குத்தகை ஒப்பந்தம் போட்டு, 8.5 லட்சம் ரூபாய், காசோலை மற்றும் ஆன்லைன் வாயிலாக பிரேம் பாபுவிற்கு அனுப்பியுள்ளார்.

scam-on-targeting-house-seekers-in-chennai

அவரை வீட்டில் குடியேறும்போது தான் அவர் ஏமாற்றமடைந்து தெரியவந்தது, பிரேம் பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து முகமது போலீசில் புகாரளித்தார், விசாரணையில் இதேபோல் அவர் 42 நபர்களிடம், 2.01 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், நேற்று முன்தினம் பிரேமை கைது செய்த தாம்பரம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.