காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது - போலீசார் அதிரடி

tamilnadu-arrest-police
By Nandhini Jan 03, 2022 11:05 AM GMT
Report

ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த அதிமுக பிரமுகர் பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் வீட்டுமனை வழங்குவதாக கூறி, ரூ.2 கோடி வரை பணம் வசூல் செய்து, சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய அதிமுக பிரமுகர்கள் மோசடி செய்துள்ளதாக வியாபாரிகள் புகார்கள் தெரிவித்தனர்.

இப்புகாரை தொடர்பாக அதிமுக பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் மீது ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் வைரவேல் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

மேலும், 10 பேர் தலைமறைவாக இருந்தார்கள். இதனையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், அதிமுக பிரமுகர் பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.