கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி - மருத்துவமனையில் அனுமதி!

West Bengal Mamata Banerjee
By Sumathi Jan 24, 2024 12:42 PM GMT
Report

 கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம், கொல்கத்தாவிலிருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள புர்பா பர்தமானில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

mamata-banerjee

அதனைத் தொடர்ந்து, அவர் கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக காரில் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

பாஜகவுடன் கள்ள உறவு; 2024 தேர்தலில் தனித்தே போட்டி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்

பாஜகவுடன் கள்ள உறவு; 2024 தேர்தலில் தனித்தே போட்டி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கார் விபத்து

அப்போது அந்த கார் மற்றொரு வாகனம் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக திடீரென நிறுத்தப்பட்டது. இதில், ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜியின் தலை, காரில் உள்ள விண்ட்ஸ்கிரீனில் மோதியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், கொல்கத்தா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "கார் விபத்தில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் பற்றி இப்போதுதான் கேள்விபட்டோம். அவர் முழுமையாகவும், விரைவாகவும் குணமடைய விரும்புகிறோம்"எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.