சகோதரரை பார்க்காமல் எப்படி செல்வேன் - ஸ்டாலினை சந்தித்த மம்தா பானர்ஜி!

M K Stalin Tamil nadu Chennai Mamata Banerjee
By Sumathi Nov 02, 2022 03:00 PM GMT
Report

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் சந்திப்பு இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இல்ல விழா

சென்னையில், மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை தந்தார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,

சகோதரரை பார்க்காமல் எப்படி செல்வேன் - ஸ்டாலினை சந்தித்த மம்தா பானர்ஜி! | Mk Stalin Mamata Banerjee Meeting

"மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார். தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்துவைத்தது எங்களையும், தலைவர் கலைஞரையும் பெருமைப்படுத்தியது. திமுகவையும் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு வருகை தந்துள்ள இந்தச் சூழலில், என்னுடைய இல்லத்திற்கு வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அதேநேரம் நான் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சகோதரரை பார்க்காமல் எப்படி செல்வேன் - ஸ்டாலினை சந்தித்த மம்தா பானர்ஜி! | Mk Stalin Mamata Banerjee Meeting

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தேர்தல் குறித்து இல்லை. தேர்தல் குறித்தோ அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை" என்றார். அதன்பின் மம்தா பானர்ஜி கூறியதாவது, "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். நான் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது திட்டமிட்ட சந்திப்பு நிகழ்வு இல்லை.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசனின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்னை வந்தேன். ஸ்டாலினை சந்திக்காமல் நான் எப்படி சென்னையில் இருந்து செல்வேன். எனவே, அவரை சந்திப்பது எனது கடமையென்று நான் அறிவேன்" என்று கூறினார்.

இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசுவோம். மக்கள் நலன் சார்ந்த அரசியல் குறித்து பேசுவோம். மக்களின் முன்னேற்றம் குறித்து உரையாடுவோம். அரசியல் கடந்து மக்களின் மேம்பாடு குறித்த உரையாடல் சிறந்தது என்று நான் கருதுகிறேன்" என்றார்.

இந்தச் சந்திப்பின்போது திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தனர்.