இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Aug 25, 2022 09:42 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொழில் மண்டல மாநாடை தொடங்கிவைத்தார்.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்னும் தொழில் முன்னைவர் திருப்பூர் மண்டல மாநாடு இன்று (ஆகஸ்ட் 25) காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின்

இவ்விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் முதலியவை இடம்பெற்றது.

இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி : முதலமைச்சர் ஸ்டாலின் | Cm Stalin Tirupur Speech

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் அதில் கூறியதாவது, தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது.

இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி

நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும். பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது.

தொழில்கள் சென்னை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்". என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.