மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்த கார்கே - காஷ்மீரில் என்ன நடந்தது?
பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது . 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 90 சட்டசபைத் தொகுதிகளுக்குக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ,25ஆம் தேதி மற்றும் அக் 1 ஆம் தேதி மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற உள்ளது.
இதன் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் 3வது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் வரும் அக். 1ம் தேதி நடைபெறுகிறது.
இதனால் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதுவா என்ற பகுதியில் பிரச்சாரம் செய்தார் .
அதிர்ச்சி சம்பவம்
அப்போது மேடையில் அவர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிக் கொண்டு இருந்த போதே மல்லிகார்ஜுன கார்கே நிலை தடுமாறி திடீரென மயக்கம் அடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உடனே ஓடி பிடித்துத் தாங்கிக் கொண்டனர்.இதனால் அந்த பிரச்சார கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.