அமித்ஷா ராமர் கோவில் பூசாரியா? - கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் கார்கே

Indian National Congress BJP
By Thahir Jan 07, 2023 06:05 AM GMT
Report

அமித்ஷா என்ன ராமர் கோவில் பூசாரியா? என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கேள்வி 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் உள்துறை அமைச்சரின் வேலை, ராமர் கோயில் திறக்கும் தேதியை அறிவிப்பது அல்ல, ராமர் கோயில் எப்போது திறக்கப்படும் என்று அக்கோயில் நிர்வாகத்தினர் தான் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலை திறப்பது குறித்து அமித்ஷா ஏன் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

is amit shah a ram temple priest Mallikarjun Kharge

திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியவை சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 1, 2024-ல் தயாராகும் என்று திரிபுராவில் அமித் ஷா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியானாவிl பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீங்கள் ஒரு அரசியல்வாதி, பூசாரி அல்ல. கோயில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்? என மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.