முதலமைச்சர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கேவே ஏற்க வேண்டும் : டி.கே.சிவக்குமார்

M K Stalin DMK
By Irumporai May 17, 2023 12:01 PM GMT
Report

கர்நாடக முதலமைச்சர் பதவியினை மல்லிகார்ஜூன கார்கேவே ஏற்றுக் கொள்ளவேண்டும் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி நிலையில், இதுவரை யார் முதலமைச்சர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடகாவில் சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில், யார் முதல்வர் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோர் டெல்லி மல்லிகார்ஜூனா கார்கேவை சந்தித்து பேசிய நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளதாகவும், துணை முதல்வராக டிகே சிவகுமார் தவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

யார் முதலமைச்சர்

இந்த நிலையில், தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கேவே ஏற்க வேண்டும் : டி.கே.சிவக்குமார் | Mallikarjuna Karke Chief Minister Tk Sivakumar

 ஏற்கனவே, துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இன்று மாலை அல்லது நாளைக்குள் முதல்வர் யார்? குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார். மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.