விந்தணு உறைதல் என்றால் என்ன? இந்தியாவில் அதிகரிக்க என்ன காரணம் -அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் விந்தணுக்களை உறைய செய்தல் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விந்தணு உறைய செய்தல்
இன்றைய வாழ்க்கைத் தரம், உணவு , சுற்றுச்சூழல் காரணிகளால் வாழ்க்கை முறையே மாறி வருகிறது. அதிலும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகத் திருமணமான தம்பதியர் கருவுறுதல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் விந்தணுக்களை உறைய வைப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் 20 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் பெரும்பாலும் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு ஆண் கருவுறுதலின் போது விந்தணுக்களின் உருவம், விந்தணுக்கள் இயக்கம் போன்றவற்றின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுக்கவும் விந்தணுவைப் பாதுகாக்க விந்தணு உறைதல் அதாவது சேமித்து வைப்பது ஒரு தீர்வை வழங்குகிறது. தற்பொழுது ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்து கருவுறுதலில் பிரச்சனை இருந்தால் கருமுட்டையுடன் விந்தணுக்களைச் சேமிக்கும் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகரிக்க என்ன காரணம்?
இந்த செயல்முறை பொதுவாக ஒரு விந்து மாதிரியைச் சேகரிப்பதுடன் தொடங்குகிறது. அதாவது விந்தணுக்கள் 15 மில்லியன் வரை இருக்க வேண்டும் .ஆனால் ஒருவருக்கு 1 அல்லது 2 மில்லியன் இருந்தால் இது சாதாரணமானது. அதற்கும் குறைவாக இருந்தால் இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் எடுக்கப்பட்ட விந்தணு மாதிரியில் உள்ள அசுத்தங்களை அகற்றப் பதப்படுத்தப்பட்டு, கிரையோபுரோடெக்டண்டுடன் கலக்கப்படுகிறது.பின்னர் விந்து திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்படுகிறது. அங்கு அது பல ஆண்டுகள் (துல்லியமாகச் சொன்னால் 20 ஆண்டுகள்) உயிர்வாழ முடியும்.
இந்தியாவில், விந்தணு உறைய வைப்பது விலை குறைவானதாகவும் அணுகக்கூடிய விருப்பமாக மாறியுள்ளது. இதைச் சேமிக்க வருடத்திற்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை செலவு ஆகிறது.