மகளிர் தினத்தில் மாதவிடாய் வலியை பரிசாக கொடுத்த நிறுவனம் - கதறிய ஆண்கள்!
ஜப்பான் நிறுவனம் ஒன்று மகளிரின் மாதாந்திர வலியை ஆண்கள் உணர்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மாதவிடாய் வலி
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் எக்ஸியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களுக்கு செயற்கை மாதவிடாய் வலி பரிசாக வழங்கப்பட்டது.
இதற்காக ’பெரியோனாய்டு’ என்ற எலெக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆணின் வயிற்றில் மின் சமிக்ஞைகளை அனுப்பி மாதவிடாய் வலி ஏற்படுத்தப்பட்டது.
ஆண்கள் கருத்து
கீழ் வயிற்றுத் தசையைத் தூண்டி தசைப்பிடிப்பின் வலியனுபவத்தை விர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆண்கள் உணரச்செய்தனர். இதனைத் தொடர்ந்து ’நகர முடியவில்லை, நிற்க முடியவில்லை, துடிதுடித்துப்போனேன்’ என்று ஆண்கள் பலரும் தங்களது அனுபவத்தை தெரிவித்தனர்.
மேலும், மாதந்தோறும் இந்த வலியோடு வீட்டிலும், பணியிடத்திலும் பெண்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள் என்பதை உணர முடிந்ததாக சிலர் பதிவிட்டுள்ளனர்.