92 வயதில் 5வது திருமணத்தை அறிவித்த ஊடக அதிபர் - 67 வயது காதலியை மணக்கிறார்!
ரூபர்ட் முர்டோக் தனது நீண்டநாள் காதலியான எலெனா ஜுகோவாவை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளார்
ரூபர்ட் முர்டோக்
தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (92). இவர் தனது நீண்டநாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளார்.
இது ரூபர்ட் முர்டோக்கின் 5 வது திருமணம் ஆகும். இந்த திருமணம் கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
5 வது திருமணம்
ஏற்கனவே 4 திருமணங்கள் செய்த ரூபர்ட் முர்டோக்கிற்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது 92வது வயதில் 5வது திருமணத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.
இவர் திருமணம் செய்யவிருக்கும் எலெனா ஜுகோவாவிற்கும் இவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். எலெனா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார்.