வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்; 31 வருஷத்திற்குப் பின் புரட்டிப்போட்ட மழை - பகீர் சம்பவம்!
வெள்ள நீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டிப்போட்ட வெள்ளம்
வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின்
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லை ஜங்ஷன் முழுக்க கடைகளில் ஒரு தளம் வரை வெள்ள நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து வருகிறது.
நெல்லை சிந்துபூந்துறை மற்றும் உடையார்ப்பட்டி பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் மிதந்து செல்வது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மீட்பு படையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.