இது கடலா… இல்லை சாலையா…? - வெள்ள நீரில் மிதக்கும் பெங்களூர்
பெங்களூரில் கனமழை பெய்து வருவதால் சாலைகளை பிளந்து ஊரையோ சுற்றி ஓடும் வெள்ளம் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் கடல் அலைப்போல் காட்சியளிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் கனமழை
பெங்களூரில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை இடியுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலா.. இல்லை சாலையா..?
இந்நிலையில், பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளை பிளந்து ஊரையே வெள்ள நீரில் மிதக்கிறது.
இது கடலா... இல்லை இது சாலையா.. என்று எங்கு பார்த்தாலும் கடல் அலைப்போல் காட்சியளிக்கிறது. வெள்ள நீரில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Shhhhhh..! Just keep paying the taxes!!#Bangalore #BengaluruRain pic.twitter.com/ds7xztqzYz
— harsh nandan (@HNandan23) September 5, 2022
Yesterday Night Heavy Rainfall #bangalorerains Affects Apartments and Their Parking. #Bangalore #bangaloreweather #bangalore_rain #bangaloreflood #bangaloreflood #bangaloreairport #bangaloretraffic #bmtc #Karnatakarains #BengaluruRain #bengalurufloods #Bengaluru pic.twitter.com/doMFl8AlvJ
— Indiaverse (@indiav_tweets) September 6, 2022