தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை - கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்!

Malaysia Singapore Crime
By Sumathi Feb 20, 2025 09:08 AM GMT
Report

தமிழருக்கு, சிங்கப்பூரில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழருக்கு தூக்கு தண்டனை

மலேசியாவைச் சேர்ந்தவர் தமிழர் பன்னீர்செல்வம். இவர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம்

மேலும், இந்த தண்டனை இன்று நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தண்டனையை நிறுத்த வேண்டும் என்றும், பன்னீர் செல்வத்திற்கே தெரியாமல் கடத்தல் நடைபெற்றதாகவும், உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

பேயால் பயம்; ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள், நிலங்கள் - நல்ல சான்ஸ்!

பேயால் பயம்; ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள், நிலங்கள் - நல்ல சான்ஸ்!

நிறுத்திவைப்பு

இதுதவிர, பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையை எதிர்த்து மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை - கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்! | Malaysian Tamil S Execution Halted Singapore

அவர் நேரடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.