பேயால் பயம்; ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள், நிலங்கள் - நல்ல சான்ஸ்!
பேய் பயத்தால் பல வீடுகள் ஆளில்லாமல் காட்சியளிக்கிறது.
பேய் பயம்
கேரளாவின் மத்திய பகுதிகளான கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் வீடுகளையும், நிலங்களையும் விற்கமுடியாமல் உரிமையாளர்கள் திணறுகின்றனர்.
ரப்பர் விலைகள் வீழ்ச்சியடைந்ததால், நில விலைகளும் கடுமையாக குறைந்துள்ளன. இதனால், வெளிநாட்டில் குடியேறிய மலையாளிகள் தங்கள் நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர். கிராமப்புற பாதை உள்ள நிலங்களின் விலை ரூ. 50-60 லட்சத்தில் இருந்து ரூ. 25-30 லட்சமாக குறைந்துள்ளது.
விற்பனையில் சிக்கல்
2000களின் தொடக்கத்தில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த பல மலையாளிகள் அங்கேயே நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், கேரளாவில் உள்ள தங்கள் நிலங்களை விற்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால், கனிசமாக குறைந்த விலைக்கு கூட வாங்க மறுக்கின்றனர். மத்திய கேரளாவில் ஏற்கனவே பல "பேய் வீடுகள்" (கைவிடப்பட்ட வீடுகள்) உள்ளன.
இந்நிலையில், மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அடிமாட்டு விலையில் விற்கும் நிலை ஏற்படும். கேரளாவின் சமூக-பொருளாதார சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப் தெரிவித்துள்ளார்.