சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை - பகீர் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை!
சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றம்
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த காணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5-ம் தேதி மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது.
அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர்.
இதற்கிடையில் இந்தியர்கள் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அமெரிக்கா எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்படுபவர்களை விமான பயணத்தின்போது எந்த வகையிலும் தவறாக நடத்துவதை தவிர்ப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
Haha wow 🧌🏅 https://t.co/PXFXpiGU0U
— Elon Musk (@elonmusk) February 18, 2025
இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்று புதிய வீடியோ ஒன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கைகளில் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, கால்களில் சங்கிலி கட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவிற்கு எலான் மஸ்க் "ஹாஹா வாவ்" என கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.