இந்தியாவுக்கு வழங்கிய 75 வருட நிதியை நிறுத்திய எலான் மஸ்க் - என்ன காரணம்?
இந்தியாவுக்கு வழங்கிய 21 மில்லியன் டாலர் நிதியை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
எலான் மஸ்க்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது அரசின் செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்துள்ளார்.
USAID மூலம் 1951- ஆம் ஆண்டு முதலே இந்தியா நிதி பெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் 14 பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகள் அமெரிக்க நிதி உதவியுடன் அமைக்கப்பட்டன.
நிதி ரத்து
மேலும், மூலதனச் சந்தை மேம்பாடு, பசுமைக் கட்டட இயக்கம், எச்.ஐ.வி., குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை நலம் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் திட்டங்களுக்கும் பணம் வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா 12 ஆயிரம் கோடி ரூபாய் பெறவுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எனவே, வாக்கு சதவிகிதத்திற்காக இந்தியாவுக்கு வழங்கப்படும் ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.