எலான் மஸ்க்கின் 13வது குழந்தையை பெற்றெடுத்த எழுத்தாளர் - யார் தெரியுமா?
தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று பெண் எழுத்தாளர் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகத்தில், DOGE எனப்படும் அரசு செயல்திறன் துறைக்கு தலைமை வகித்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்துள்ளது. 2000ல் கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. பின் அவருடன் 5 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
தொடர்ந்து, பிரபல நடிகையான ரிலேவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் எந்த குழந்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து பாடகியான க்ரீம்ஸை திருமணம் செய்து கொண்ட எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் பதிவு
தற்போது ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். மொத்தமாக 12 குழந்தைகள் பிறந்த நிலையில் 11 குழந்தைகள் அவருடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள பதிவில், 5 மாதங்களுக்கு முன்பாக என் குழந்தையை உலகிற்கு வரவேற்றேன்.
குழந்தையின் தந்தை எலான் மஸ்க் தான். குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியதால், இங்கு பதிவிட்டுள்ளேன். என் குழந்தையை சாதாரண மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்க்க விரும்புகிறேன்.
அதன் காரணமாக ஊடகங்கள் என் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து எலான் மஸ்க் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.