Tuesday, Apr 29, 2025

97 பில்லியனுக்கு Open AI நிறுவனத்தை விலை பேசிய எலான் மாஸ்க் - சாம் கொடுத்த பதிலடி

Elon Musk Chat GPT X Open AI
By Karthikraja 3 months ago
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 Open AI நிறுவனத்தை விலைக்கு கேட்ட எலான் மாஸ்க்கிற்கு அதன் CEO பதிலடி கொடுத்துள்ளார்.

எலான் மஸ்க்

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் Tesla, SpaceX,  Starlink போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

[MO414G[

கடந்த 2022 ஆம் ஆண்டு டிவிட்டர்(Twitter) சமூக வலைத்தளத்தை 55 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு (இந்திய மதிப்பில் 3.75 லட்சம் கோடி) விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதற்கு எக்ஸ்(X) என பெயரிட்டு பல்வேறு மாற்றங்களை செய்தார்.

விலை பேசும் மஸ்க்

தற்போது எலான் மஸ்க் அமெரிக்கா அரசின், அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைமை பொறுப்பை வகித்து வருகிறார். இந்நிலையில் Open AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு(இந்தியா மதிப்பில் ரூ. 8.44 லட்சம் கோடி) விலைக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை எலான்மஸ்க் தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். 

elon musk openai

2015 ஆம் ஆண்டு Open AI நிறுவனம் துவங்கப்பட்ட போது எலான் மஸ்க் அதன் இனை நிறுவனராக இருந்தார். அதன் பின்னர் லாப நோக்கமற்ற செயல்பாட்டில் இருந்து ஓபன் ஏஐ பாதை மாறி விட்டதாக விமர்சித்தார். நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் தன்னிடம் இருக்க வேண்டுமென விரும்பிய மஸ்க், அது முடியாது என அறிந்ததும் நிறுவனத்திலிருந்து விலகினார்.

சாம் ஆல்ட்மேன் பதிலடி

ChatGPT, Text மூலம் வீடியோ உருவாக்கும் Sora, Text மூலம் படங்களை உருவாக்கும் DALL-E, Code களை உருவாக்கும் Codex ஆகியவை Open AI நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். 

open ai sam altmen

ஓபன் ஏஐ நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல தீவிரமாக பணியாற்றி வரும் அதன் CEO சாம் ஆல்ட்மேன், Open AI நிறுவனத்தை விற்க முடியாது. வேண்டுமானால் 97.4 பில்லியன் டாலருக்கு எக்ஸ் தளத்தை வாங்கி கொள்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.