பாகிஸ்தானில் எனக்கு மரண தண்டனை தர முயற்சி - பகீர் கிளப்பும் மார்க் ஜுக்கர்பெர்க்

Pakistan Death Penalty Meta Mark Zuckerberg
By Karthikraja Feb 13, 2025 12:00 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 தனக்கு மரணதண்டனை விதிக்க பாகிஸ்தானில் முயற்சி நடந்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் மெட்டா ஆகும். மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 

mark zuckerberg

சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய அவர் பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட முயற்சி நடந்தது குறித்து பேசியுள்ளார். 

கடவுள் குறித்து பேஸ்புக் கமெண்ட் - 4 பேருக்கு மரண தண்டனை

கடவுள் குறித்து பேஸ்புக் கமெண்ட் - 4 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மரணதண்டனை

இது குறித்து பேசிய அவர், "பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். பாகிஸ்தானில் அது தெய்வ நிந்தனை. அந்தப் புகைப்படத்தை பேஸ்புக்தான் அங்கீகரித்து பரப்புகிறது எனக் கருதி, அந்த சம்பவத்துக்கு எனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எனக்கு பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால், அந்த வழக்கை பற்றி நான் கவலைப்படவில்லை. 

அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர். பல நாடுகளின் விதிமுறைகளை மதித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது" என பேசினார்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் கூறிய இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், இஸ்லாம் குறித்தோ அதன் புனித நூலான குரான் குறித்தோ அவதூறாக பேசுவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்க கூட பாகிஸ்தான் சட்டத்தில் இடமுண்டு.