அமெரிக்கா டூ சென்னை - மெகா திட்டத்தை செயல்படுத்த உள்ள மெட்டா
10 பில்லியன் டாலர் செலவில் கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு திட்டத்தை மெட்டா வழங்க உள்ளது.
மெட்டா
மார்க் ஜூக்கர்பெர்குக்கு சொந்தமான மெட்டா நிறுவனம், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களை சொந்தமாக வைத்துள்ளது.
உலகில் மொபைலில் இணையத்தை பயன்படுத்துபவர்களில் 22% டிராபிக் மெட்டா நிறுவனத்தின் 3 சமூக வலைதளத்தால் ஏற்படுகிறதாம்.
கடலுக்கு அடியில் கேபிள்
எனவே தங்களுக்கு மட்டும் சொந்தமான பைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க்கை உருவாக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 பில்லியன் டாலர் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தின் படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு, கிட்டத்தட்ட 40,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
டபிள்யூ கேபிள்
கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்க கப்பல்களை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், அந்த கப்பல்களுக்கு டிமாண்ட் உள்ளதால் இந்த திட்டம் செயல்பட தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அமெரிக்காவின் விர்ஜீனியா கடற்கரையிலிருந்து தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மற்றும் டர்பன், இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாம். பின்னர் இந்தியாவில் முதல் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரம் வரை இந்த கேபிள் இணைப்பு நீட்டிக்கப்பட உள்ளது.
W வடிவில் இந்த கேபிள் பாதை உள்ளதால் டபிள்யூ கேபிள் என இந்த திட்டத்திற்கு மெட்டா நிறுவனம் பெயர் சூட்டி உள்ளதாம்.