திரையுலகில் Casting Couch ஆழமாக வேரூன்றி உள்ளது -வெளியான பரபரப்பு தகவல்!
மலையாளத் திரையுலகில் 'Casting Couch' எனப்படும் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Casting Couch
சினிமாவில் "காஸ்டிங் கவுச்" என்ற பெயரில் பிரபல நடிகைகள் முதல் புதியதாக நடிக்க வரும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது என்பதை நீண்ட காலமாக கேள்விப்பட்டிருப்போம்.
இதனைப் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் இந்த சூழல் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக பல பிரபலங்களும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் 17 பிப்ரவரி 2017 அன்று கொச்சி அருகே ஓடும் காரில் முன்னணி மலையாள நடிகை ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கேரள மாநில அரசால் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான நடிகர் திலீப், சதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை இன்று வரை நடந்து வருகிறது.
மலையாளத் திரையுலகம்
இந்த நிலையில் மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யகேரள அரசு உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து மூத்த நடிகை சாரதா மற்றும் முன்னாள் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு , இரண்டு ஆண்டுகள் மலையாளத் திரையுலகில் தீவிர ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில் மலையாளத் திரையுலகில் 'Casting Couch' எனப்படும் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட செட்களில் மது மற்றும் போதைப் பொருட்களைத் தடை செய்தல், பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்தல், பணியாளர்களின் பின்னணி குறித்து சோதனை செய்தது .
மேலும் ,பெண்களை மரியாதையுடன் நடத்துதல், சம ஊதியத்தை உறுதி செய்தல் மற்றும் செட்களில் கொச்சையான வார்த்தைப் பிரயோகத்தை ஒழித்தல் உள்ளிட்டவைகளையும் ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.