பிரபல கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பு.. வைரலாகும் நயன் - விக்கி ரீசண்ட் க்ளிக்ஸ்!

Nayanthara Vignesh Shivan Gossip Today Bollywood
By Sumathi Jul 11, 2022 11:48 AM GMT
Report

மும்பையில் கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பில் எடுத்துக்கொண்ட விக்கி - நயனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 விக்கி - நயன்

நடிகை நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் மும்பையில் முகாமிட்டுள்ள நயன்தாரா, அங்கு நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

nayanthara

அதேபோல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் மும்பையில் இருந்தபடியே தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஷூட்டிங்கில் பிஸி

இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

vignesh shivan

இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் உடன் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும்.திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக உள்ள விக்கி - நயன் ஜோடி, விடுமுறை தினம் என்பதால் ஜோடியாக வெளியே சென்றுள்ளனர்.

 நடிகை மலைகா அரோரா

அப்போது பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவை நேரில் சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த போட்டோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

நடிகை மலைகா அரோராவுக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் (வயது 37) கபூரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் தற்போது லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். 

தமிழகமெங்கும் கமல்ஹாசன் திடீர் சுற்றுப்பயணம்.. ஏன்?