நயன் - விக்கி திருமணம்: OTT-இத்தன கோடிக்கா வித்திருக்காங்க?
கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் வரும் ஜூன் 9 அன்று மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருமண நாள்

தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், பலரும் அதன் அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்.
நெட்ஃப்ளிக்ஸ்
மேலும், மொத்த திருமண நிகழ்ச்சியையும் ஆவணப் பட வடிவில் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும், இந்தத் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சூர்யா முதலான பல்வேறு முன்னணி நடிகர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அதனைத் தொடர்ந்து சென்னையில் நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, காதல் ஜோடி இருவரும் தங்கள் திருமண நிகழ்ச்சியின் வீடியோ உரிமத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்குப் பெரிய தொகை ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil