மகரஜோதி தரிசனம்; குவியும் பக்தர்கள் - இதற்கெல்லாம் அனுமதி இல்லை!

Kerala Festival Sabarimala
By Sumathi Jan 15, 2024 12:42 PM GMT
Report

சபரிமலையில் இன்று(ஜன.15) மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது.

மகரஜோதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

kerala

மாலை 6:20 மணிக்கு 18- படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து, நடைதிறந்து தீபாராதனை நடைபெறும்.

4000 கோடியில் சபரிமலை விமான நிலையம் - பிரதமர் மோடி வரவேற்பு!

4000 கோடியில் சபரிமலை விமான நிலையம் - பிரதமர் மோடி வரவேற்பு!

குவிந்த பக்தர்கள்

தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், மகரஜோதி மூன்று முறையும் காட்சிதரும். அதன்பின், மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் 18 படிகள் ஏறுவதற்கு அனுமதி இல்லை.

sabarimala

கட்டடங்கள், மரங்கள், மலைச் சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8:00 மணிக்கு பின்னர் இவர்கள் மலை ஏறலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் நிலக்கல் மற்றும் பிற வெளியூர்களுக்கு செல்ல வசதியாக 1200 கேரள அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், 1000 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.