வார்னிங் கொடுத்த மகாலெட்சுமி - தீயாய் பரவும் விவாகரத்து தகவல்!
மகாலெட்சுமி முன்னதாக பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
மகாலெட்சுமி-ரவீந்தர்
பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வரும் ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில், ரவீந்தர் சில நாட்களுக்கு முன்பாக தனியாக நிற்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
விவாகரத்து?
மேலும், கஷ்டமான நேரத்தில் சிரியுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விவாகரத்தா என கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். அதனைத் தொடர்ந்து, எத்தனை முறை உன்னிடம் தனியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிடாதே என சொல்லி இருக்கிறேன்.
இப்ப பாரு நம்ம ரெண்டு பேருமே பிரேக் அப் பண்ணிட்டாங்கனு நெனச்சுக்கிட்டு பல செய்திகளை போடுறாங்க என மகாலெட்சுமி, கணவரை வார்ன் செய்திருந்தார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.