கணவரை போலவே மகாலெட்சுமி எடுக்கும் அவதாரம் - நடிப்புக்கு BYE!

Sumathi
in பிரபலங்கள்Report this article
மகாலெட்சுமியும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவீந்தர்-மகாலெட்சுமி
ரவீந்தர்-மகாலெட்சுமி இருவரும் திருமணமாகி இரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை இவர்களை பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளது. மேலும், ரவீந்தர் பகிரும் அனைத்து புகைப்படங்களும் தீயாய் பரவி வந்தது.
இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். குண்டாக இருக்கும் ரவீந்தரை பணத்திற்கு ஆசைப்பட்டு மகாலெட்சுமி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த அவர், மாதம் ரூ. 3 லட்சம் சம்பாதிக்கிறேன்.
நடிப்புக்கு BYE!
இவ்வளவு சம்பாதித்துவிட்டு எதற்காக ரவீந்தரின் பணத்திற்கு ஆசைப்பட வேண்டும். இனியாவது அவரை தவறாக பேசுவதை நிறுத்துங்கள் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து கணவருடன் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படங்களையே பகிர்ந்து வருகிறார் மகாலெட்சுமி.
தற்போது அந்தப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து வந்தனர். ஆனால் அதில் உண்மை இல்லை. ஆனால் இவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் தாயாக விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், தாயான பிறகு நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சீரியல்களை தயாரிக்கலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார் மகாலட்சுமி என தகவல் வெளியாகியுள்ளது.