இரண்டே மாதத்தில் கர்ப்பம்? வெளுத்து வாங்கும் மகாலெட்சுமி - பரவும் ஃபோட்டோஸ்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
மகாலெட்சுமி கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ரவீந்தர்-மகாலெட்சுமி
ரவீந்தர்-மகாலெட்சுமி இருவரும் திருமணமாகி இரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை இவர்களை பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளது. மேலும், ரவீந்தர் பகிரும் அனைத்து புகைப்படங்களும் தீயாய் பரவி வந்தது.
இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். தொடர்ந்து கணவருடன் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படங்களையே பகிர்ந்து வருகிறார் மகாலெட்சுமி.
கர்ப்பம்?
மேலும், தற்போது மகாலெட்சுமி வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவரது வயிறு சிறிது பெரியதாகவே உள்ளது கர்ப்பாக இருப்பார் என கூறி வருகின்றனர். அவர் தாயாகும் ஆசையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் இந்த பேச்சு வலம் வந்த வண்ணம் உள்ளது.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.