Saturday, May 10, 2025

கூட்ட நெரிசலில் 15 பேர் பலி; திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் - முதல்வர் அறிவிப்பு!

Uttar Pradesh Festival Yogi Adityanath Death
By Sumathi 3 months ago
Report

கும்பமேளாவில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில்15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 அமாவாசை

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் ஜன.13ம் தேதி முதல் மகா கும்பமேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.

kumbh mela 2025

இந்நிலையில் மவுனி அமாவாசையான இன்று (ஜன.29) கும்பமேளாவில் அதிகாலை கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனே மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தியேட்டருக்குள் கட்டுப்பாடுகள் - நீதிமன்றம்

இனி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தியேட்டருக்குள் கட்டுப்பாடுகள் - நீதிமன்றம்

15 பேர் பலி

அதில், மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வாருங்கள், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கங்கை படித்துறையில் குளிக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில் 15 பேர் பலி; திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் - முதல்வர் அறிவிப்பு! | Mahakumbh Crowd 15 Dead Up Cm Not Bath Triveni

திரிவேணி சங்கமம் வர அவசியமில்லை. நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.

சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் பக்தர்கள் அமைதியான முறையில் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் இடம் தரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.