இனி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தியேட்டருக்குள் கட்டுப்பாடுகள் - நீதிமன்றம்
16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியேட்டர் கட்டுப்பாடுகள்
தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிடுதல் மற்றும் டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதி விஜய்சென் ரெட்டி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பும்,
நீதிமன்ற உத்தரவு
இரவு 11 மணிக்குப் பிறகும் தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 22-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான் IBC Tamil

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
