Living Relationship-ல் இருக்கீங்களா? இதை செய்ய தவறினால் சிறைதான் - இன்று முதல் அமலான புதிய சட்டம்!
லிவிங் உறவு முறையில் வாழ்பவர்கள் அரசுக்குத் தெரியாமல் இருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
லிவிங் உறவு முறை
உத்தரகாண்ட மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக புஷ்கர் சிங் தாமி போட்டியிட்டார். அப்போது பிரசாரத்தில் பேசிய அவர் நான் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார்.இதனையடுத்து பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் குறித்த தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் சட்டம் அமலாகிறது.இந்த சட்டத்தின்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் லிவிங் உறவு முறையில் வாழ்பவர்கள் அம்மாநில அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.மேலும் தங்கள் உறவை 1 மாதமாகியும் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைத் தண்டனை
அபராதமும், சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்தைப் பொறுத்தவரை அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு.இப்படி இப்படி அறிவிப்பதன் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்படாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக விவாகரத்தைப் பொறுத்தவரையில், கணவனோ, மனைவியோ வேறு மதம் மாறினால் அது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.