கணவர்களை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்ட 2 மனைவிகள் - வாயடைத்துப் போன உறவினர்கள்!
இரண்டு பெண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் டார்ச்சர்
உத்தர பிரதேசம், தியோரியா நகரில் பிரபலமான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு வந்த கவிதா மற்றும் பப்லு என்ற 2 பெண்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டனர்.
பப்லு கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார். பின் இருவரும் அனைத்து சடங்குகளையும் செய்துள்ளனர். தொடர்ந்து திருமணம் குறித்து பேசிய பப்லு, "நாங்கள் 2 பேரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொண்டோம்.
நாளடைவில் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தோம். அவரவர்களின் குடும்ப கதையை பேசிக்கொண்டோம். அப்போதுதான் எங்களது இருவரின் கணவர்களுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது.
மனைவிகள் திருமணம்
கணவர்கள் தினமும் செய்யும் டார்ச்சர்களை நாங்கள், பரிமாறி கொண்டோம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், நாங்களே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இனிமேலாவது அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
ஒரு சிறந்த தம்பதியாக கோரக்பூரில், எங்கள் வாழ்க்கையை துவங்க போகிறோம். ஆனாலும் நாங்கள் இருவரும் சிறப்பாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதால், வேலைக்கு செல்ல போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இதனால் இருவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.