கன்னித்தன்மையை சோதித்த மாமியார் - முதலிரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்
மாமியார் தனக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கன்னித்தன்மை சோதனை
மத்திய பிரதேச மாநில பெண் ஒருவர் தனக்கு திருமணமான அன்று முதல் இரவில் தனது மாமியார் கன்னித்தன்மை சோதனை நடத்தியதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்ய இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரு சிதைவு
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போபாலைச் சேர்ந்த ஒருவருடன் 2019 ஆம் ஆண்டு டிசம்ப மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தன்று முதலிரவு அறைக்கு வந்த பெண்ணின் மாமியார், மோசமான முறையில் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சால், 3 மாதத்தில் கருசிதைவு ஏற்பட்டதாகவும் அடுத்தது 9 மாதத்தில் சிசு இறந்து பிறந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு ஒரு பெண் உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் விசாரணையில், திருமணமான முதல் இரவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்தன்மையைச் சரிபார்க்க மாமியார் முறையற்ற முறைகளைக் கையாண்டதாகவும், இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.