கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள்; அதுதான் சனாதன உச்சம் - அரசால் வெடித்த சர்ச்சை
சனாதன தர்மத்தின் உச்சம் குறித்து மத்திய அரசு கூறியுள்ள தகவல் சர்ச்சையாகியுள்ளது.
சனாதன தர்மம்
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக், உஜ்ஜைனி உள்ளிட்ட புனித நதிகளில் கும்பமேளா நடத்தப்படுகிறது.
மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. இந்த விழா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்களுக்கு நடக்கும். மகா கும்பமேளாவில் 35 கோடி பக்தர்கள், துறவிகள், அகோரிகள் உள்ளிட்டோர் புனித நீராடுவார்கள் என தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் (சாதுக்கள்) அணிவகுப்புடன் உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜில் நடைபெற உள்ள மகா கும்பமேளா நிகழ்வு சனாதன தர்மத்தின் உச்சம்.
கும்பமேளா
சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கியது. இது சனாதன கலாச்சாரத்தின் காலங்களைக் கடந்த உருவகமாக அமைகிறது. கங்கை, யமுனை மற்றும் புலன் உ ணர்வுக்கு அப்பாலான மாய உலகின் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இந்தப் புனித நிலம், தெய்வீக ஆசீர்வாதங்களையும் முக்தியையும் தேடும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆன்மீக காந்தமாகச் செயல்படுகிறது.
இங்கே, பக்தி, தியானம் மற்றும் ஆன்மீகத்தின் திரிவேணி சங்கமத்துடன் மகா கும்பமேளா ஒரு தெய்வீகப் பயணமாக மாறுகிறது. கும்பமேளா நான்கு பரிமாணக் கொண்டாட்டமாக விவரிக்கப்படுகிறது.
ஒரு ஆன்மீகப் பயணம், ஒரு தர்க்க அதிசயம், ஒரு பொருளாதார நிகழ்வு மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் ஒரு சான்று என குறிப்பிட்டுள்ளது.