தமிழகத்திலேயே அதிக வயது; 40 வருஷமா ஓடியாடிய காந்திமதி - என்ன நடந்தது?
யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
யானை உயிரிழப்பு
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்ற யானை காந்திமதி, கடந்த 1985-ல் நன்கொடையாளர்களால் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது 56 வயதாகிய காந்திமதி, வயது முதிர்வினால் மூட்டு வலி மற்றும் பிற உடல் நலக்குறைவுகளுக்கு முற்பட்டு, கடந்த மாதம் மூட்டு வலி அதிகரித்தது. அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டிருந்தன.
சமீபத்திய நிலையில், காந்திமதி யானை ஒரு மாதம் முழுவதும் தூங்காமல் அன்றாடப் பணிகளை செய்து வந்தது. கடந்த 11ஆம் தேதி அதிகாலை, யானை படுக்காமல் நின்று இருந்த பிறகு, ஏற்கனவே ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, யானை திடீரென தன் உடலை தூக்க முடியவில்லை.
பக்தர்கள் சோகம்
இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, கிரேன்கள் மூலம் யானையை நிறுத்துவதற்கான முயற்சியும் மேற்கொண்டனர்.
நேற்று மாலை 2 கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, யானையின் உடலை தூக்கி நின்றது. அதன்பிறகு, சில நேரங்களில் கீழே படுத்து, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி இன்று காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த செய்தி, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் கோயிலின் நடை இன்று மூடப்பட்டு, யானையின் இறுதிச் சடங்கு முடிவதுடன் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.